சிங்கப்பூர் வலைப்பதிவர் அமோஸ் யீக்கு அமெரிக்காவில் புதிய பிரச்சனை.!!
அமெரிக்காவில் சிறையில் இருந்து சமீபத்தில் பரோலில் விடுவிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த வலைப்பதிவாளர் அமோஸ் யீ, தற்போது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையினரால் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
27 வயதான யீ பெங்ஷான், விஸ்கான்சின் மாநிலத்தின் ஜூனோ கவுண்டி தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரை மீண்டும் கைது செய்ததற்கான காரணம் மற்றும் அவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது குறித்த தகவல் தற்போதைக்கு வெளியாகவில்லை.
2021 ஆம் ஆண்டு, சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததும், வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியான சீண்டல்கள் தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யீக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.