இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!!

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, அறிமுகமில்லாத நபருடன் வீடியோ அழைப்பின்போது திரையைப் பகிரும் சமயங்களில் வாட்ஸ்அப்பில் எச்சரிக்கை செய்தி தோன்றும்.

இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு, சிங்பாஸ் அல்லது மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் மோசடிப்பேர்வழிகளுக்கு வெளிப்படுவதைத் தடுக்க முடியும்.

மேலும், மெசஞ்சர் செயலியிலும் சந்தேகத்திற்கிடமான உரையாடல்களை மோசடி எனக் கண்டறியும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதுகாப்பு முயற்சிகள் அனைத்தும் மோசடிகளுக்கு எதிராக மெட்டா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று மெட்டாவின் சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பொது கொள்கைத் தலைவர் கிளாரா கோ தெரிவித்துள்ளார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK