சிங்கப்பூரில் கனமழையிலும் நடனமாடிய மாணவிகள்..! இணையத்தில் வைரலான வீடியோ..!!
சிங்கப்பூரில் கனமழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், இரண்டு மாணவிகள் மழையைப் பொருட்படுத்தாமல் நடனமாடியபடி சாலையைக் கடந்து சென்ற காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி பதிவான இந்தக் காணொலியில், பள்ளி சீருடையில் இருந்த இரண்டு மாணவிகள் மழையில் உற்சாகமாக நடனமாடியபடி சாலையைக் கடந்து செல்வது இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் க்ளிமெண்டி 1 அவென்யூ பகுதியில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையில், மாணவிகள் சாலையைக் கடந்து சென்றுள்ளனர்.
அவர்கள் தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் “Baile do Arthur Lima” என்ற நடன அசைவுகளை ஆடியதாகக் கூறப்படுகிறது.
மாணவிகள் மழையில் மகிழ்ச்சியாக நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காணொலி ஏராளமான பார்வைகளையும், விருப்பங்களையும், கருத்துகளையும் பெற்றுள்ளது.
பலரும் இந்தக் காட்சியைப் பார்த்து தங்களது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். மழையிலும் மகிழ்ச்சியை அனுபவித்த மாணவிகளின் உற்சாகமான தருணம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.