பயணத்தின் நடுவே பீதி..!!புக்கிட் திமா காட்டில் அவசர அழைப்பு..!!
சிங்கப்பூர்:புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் நேற்று (01.11.25) காலை ஒருவருக்கு திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது.அவருக்கு உதவ சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் (SCDF) உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர்.
சிங்கப்பூர் ஹைக்கர்ஸ் என்ற ஃபேஸ்புக் குழுவில் ஒரு இணையவாசி வெளியிட்ட பதிவில், சம்பவம் நடந்தபோது எடுத்த வீடியோவும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
அவற்றில், பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு சிவில் பாதுகாப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததையும், வரைபடத்தின் முன் கூடியிருந்த பணியாளர்கள் மீட்புப் பணியின் துல்லியமான இடத்தை அடையாளம் காண முயன்றதையும் காண முடிந்தது.
சிவில் பாதுகாப்புப் படையினர் அளித்த தகவலின்படி, காலை 9.40 மணியளவில் நார்த் வியூ ஹட் பகுதியில் இருந்து உதவி கோரிய அழைப்பு வந்ததாக கூறியது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பணியாளர்கள் சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவரை பரிசோதித்தனர்.
ஆனால் அந்த நபர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததாக SCDF தெரிவித்துள்ளது.