சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (மார்ச் 28)ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, வேகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காகவும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாமல் இருந்ததற்காகவும் அல்லது அதற்கான காலத்தை தாமதப்படுத்தியதற்காகவும் மேலும் எந்தவொரு ஆய்வுகளுக்கும் உட்படாமல் இருந்ததற்காகவும் 66 லாரி ஓட்டுநர்கள் மீது  நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

66 லாரிகளில் 2 லாரி உரிமையாளர்கள் மீது மார்ச் 18 ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.


வேகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்:
👉🏻12,000 கிலோகிராமிற்கு அதிகமான சுமையைத் தாங்கும் லாரிகள், 10,000 கிலோகிராமுக்கு அதிகமான சுமை தாங்கும் பொது சேவை வாகனங்கள் மற்றும் 2018 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்டு, 5001 முதல் 12,000 கிலோகிராமுக்கு அதிகபட்ச சுமையைத் தாங்கும் திறன் கொண்ட லாரிகள் போன்றவற்றில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

👉🏻2018 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட 3,501 முதல் 5,000 கிலோகிராமிற்கும் அதிகமாக சுமையைத் தாங்கும் லாரிகள், வேகக் கட்டப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவதற்காக,  இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் , வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தாமல் இருப்பவர்களுக்கு $1,000 அபராதம் அல்லது 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டு விதிக்கப்படலாம்

இந்த தவறை மீண்டும் செய்பவர்களுக்கு $2000 வரை அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டு விதிக்கப்படலாம்.

மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு,  வாகனக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் பொதுக் காப்பீட்டு சங்கங்கள் ஆகியவை அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து வருவதாகவும் போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

வாகனங்களின் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய வாகனங்களின் மீது உரிமைக்கோரல் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்றும் அல்லது மறுமதிப்பீடு செய்யப்படலாம் என்றும் காப்பீட்டு நிறுவன விதிமுறைகள் கூறுகின்றன.

விதிமுறைகளை மீறிய வாகனங்கள் சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்படும் எனவும், மீறிய வாகன உரிமையாளர்கள் சாலை வரியைப் புதுப்பிக்க இயலாது எனவும், அதனால் அவர்களது காப்பீட்டுத் திட்டமானது பாதிக்கப்படும் எனவும் போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக வாகன உரிமையாளர்கள், அவர்களது வாகனங்களில் வேக் கட்டப்பாட்டுக் கருவிகளை விரைவில் பொருத்த வேண்டும் எனவும் போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK