சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் வோங்!! காரணம் என்ன??

சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் வோங்!! காரணம் என்ன??

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று (ஜூன் 22) சீனாவிற்கு ஐந்து நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார்.

சிங்கப்பூர்-சீனா இருதரப்பு உறவுகளுக்கான ஒரு மூலோபாய பாதையை உருவாக்கும் முயற்சிகளில் சீனத் தலைவர்களுடன் திரு வோங் ஈடுபட்டுள்ளார்.

சிங்கப்பூரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், பிரதமர் வோங்கின் சீனப் பயணம் இடம்பெறுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, திரு. வோங் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.

சீனாவில் அதிக அளவில் முதலீடு செய்து வரும் நாடாக சிங்கப்பூர் உள்ளது.

திரு வோங், சீனாவின் மூன்று உயர் பதவிகளில் உள்ள தலைவர்களான ஜனாதிபதி ஸி ஜின்பிங், பிரதமர் லி கியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர் சாவ் லெஜிஆகியோரை பெய்ஜிங்கில் சந்திப்பார்.

இரு தரப்பினரும் தங்கள் உறவை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் மறு உறுதிப்படுத்தவும், இரு நாடுகளின் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் இந்த பயணம் முக்கியமானதாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan