இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

இந்தோனேசிய தலைநகர் ஜகார் தாவில் இருந்து யோக் யகர்த்தா நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 34 பயணிகள் இருந்ததாக தெரியவந்தது.

மத்திய ஜாவாவின் செமராங் நகரில் இருக்கக்கூடிய கிராப்யக் கட்டண சலையில் இருந்த ஒரு வளைவில் இந்தப் பேருந்து திரும்பிய போது கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது டிசம்பர் 22, 2025 அன்று அதிகாலை நடந்தது.

இந்த விபத்தில் ஆறு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

அருகில் இருந்த இரண்டு மருத்துவமனைகளில் 18 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் நடந்த பேருந்து விபத்தில் 16 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மத்திய ஜாவா காவல்துறை தலைவரான ரிபுத் ஹரி விபோவோ கூறியதாவது:
விபத்திற்கு முன்பே அந்த பேருந்து மிக வேகத்தில் சென்றதாகவும் நேரில் பார்த்த ஒருவர் இதை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த ஓட்டுனர் தற்போது சிகிச்சையில் இருப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை எனவும் தெரிவித்தார். சிகிச்சை பெற்று உடல் நலம் சீரான பிறகு விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK