உட்லண்ட்ஸ் சோதனை ச்சாவடி அருகே சாலை விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!
சிங்கப்பூர்: நேற்று காலை (மே 16) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குச் செல்லும் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து வழித்தடம் பாதிப்புக்குள்ளானது.
நேற்று காலை சுமார் 9:00 மணி அளவில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் 10A வெளியேறும் வழிக்கு அருகில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
மேலும் அந்த பதிவில் இந்த விபத்து காரணமாக 3 வழித்தடங்களில் ஒரு வழித்தடம் தடைபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
பிறகு காலை 10:30 மணியளவில் விபத்து நடந்த இடம் சீரமைக்கப்பட்டதாகவும் அனைத்து பாதைகளும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் முகநூலில் பதிவிட்ட இருந்தது.
இருப்பினும் மலேசியாவை நோக்கிச் செல்லும் போக்குவரத்து கூட்டமாக இருப்பதாகவும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இருந்து வெளியே செல்லும் போக்குவரத்து அதிகமாக இருப்பதாகவும் இதனால் சோதனைச் சாவடியை கடக்கும் நேரங்களில் தாமதம் ஏற்பட கூடும் எனவும் மற்றொரு பதிவை ICA அதிகாரிகள் பதிவிட்டு இருந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்து சம்பவஇடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
இந்த சாலை விபத்தில் ஒரு காரும் 2 மோட்டார் சைக்கிளும் சம்மந்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டவர்களின் வயது 30 மற்றும் 52 என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. காயமடைந்த இருவரையும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர்.
30 வயதான ஓட்டுநர் காவல்துறைய விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.