குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவல்துறை அதிகாரியின் செயல் வைரல்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குடும்ப தகராறை கையாள்வதற்காக வந்த காவல்துறை அதிகாரி ஒரு குழந்தையை காப்பாற்றிய சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
செப்டம்பர் 19 ஆம் தேதி மாலை, ரசாக் இரவுப் பணியைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஒரு வீட்டுத் தகராறு வழக்கைக் கையாள தெம்பனிஸ் தெரு 33 க்குச் செல்லுமாறு காவல் செயல்பாட்டுக் கட்டளை மையத்திலிருந்து (POCC) அறிவுறுத்தல்களைப் பெற்றார்.
இந்த வழக்கைப் புகாரளித்த நபர், வீட்டில் பணிப்பெண் தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறினார்.
உடனே நிலைமையைப் புரிந்துகொள்ள ரசாக் சம்பவ இடத்திற்கு விரைந்தார். விசாரணை மேற்கொள்ளும் நேரத்தில் தாய் குழந்தையை நோக்கி ஓடினார். அதிகாரி என் குழந்தையை காப்பாற்றுங்கள்.. என் குழந்தை மூச்சு விட சிரமப்படுகின்றது இன்று கதறி அழுதார்.
உடனே ரசாக் குழந்தையை கையில் எடுத்து தான் கற்றுக்கொண்ட முதலுதவி நுட்பங்களைப் பயன்படுத்தி, குழந்தையை குப்புற திருப்பி கைகளில் வைத்து, குழந்தையின் முதுகில் பலமுறை தட்டிக் கொடுத்து, குழந்தையின் வாயில் சிக்கிய பொருளை வெளியேற்ற முயன்றார். பின்னர் அவர் குழந்தையை கவனமாக திருப்பி, காற்றுப்பாதையை சுத்தம் செய்தார். பின்னர் குழந்தை வாந்தி எடுத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த சிவில் பாதுகாப்புப் படை துணை மருத்துவர்கள் குழந்தையை மேலதிக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிறகு, ரசாக் தனது கடமைகளை நிறைவேற்ற மறக்கவில்லை.மேலும் தம்பதியினரின் முந்தைய தகராறைத் தீர்க்க தொடர்ந்து உதவினார்.