சிங்கப்பூரில் பள்ளியில் பரபரப்பு..!! வன்முறையில் ஈடுபட்ட மாணவிக்கு தண்டனை..!!
சிங்கப்பூரில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டும், பள்ளியின் ஊழியர்களைப் பேனாவை பயன்படுத்திக் காயப்படுத்தியதற்கும் மாணவிக்கு தண்டனையாக சீர்திருத்த பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி அன்று பள்ளிக்கு தாமதமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவி சென்றுள்ளார்.
அதற்காக பள்ளியின் செயல்பாட்டு மேலாளர் மாணவியின் கைபேசியைப் பறிமுதல் செய்துள்ளார். அந்த மாணவி தனது கைபேசியை இடைவெளியின் போது அவரிடம் இருந்து திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த செயல்பாட்டு மேலாளர் கைபேசியை தர மறுத்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த மாணவி தனது கையில் இருந்த பேனாவைப் பயன்படுத்தி முதலில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டாள்.
பின்னர் அந்த மேலாளரின் இடது கையில் அந்த பேனாவின் முனையைப் பயன்படுத்தி கீறியுள்ளார். அதனைக் கண்ட ஒரு ஆசிரியர் அந்த மாணவியின் செயலைத் தடுக்க முயற்சித்துள்ளார். அவரையும் இந்த மாணவி பேனாவால் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தையெடுத்து அந்த மாணவி தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பள்ளியில் நடந்தது குறித்த தகவலானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் மாணவியின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தின் கீழ் அந்த மாணவியின் அடையாளம் வெளியில் வராமல் பாதுகாக்கப்படுகிறது. அந்த மாணவி $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அந்த மாணவிக்கு நீதிமன்றம் 6 மாத கால சீர்திருத்தப் பயிற்சி தண்டனையை வழங்கியுள்ளது.அந்த தண்டனையை வரும் ஜூன் 15-ம் தேதி அன்று அந்த மாணவி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.