சிங்கப்பூரில் கனமழை..!! வெள்ள எச்சரிக்கை விடுத்த PUB..!!
சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 15) காலை பல பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆம்பூர் சாலையிலிருந்து தஞ்சோங்கா தென்கிழக்கு சாலை வரையிலான மவுண்ட்பேட்டன் சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு PUB கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுப் பயன்பாட்டு வாரியம் இன்று (மே 15) காலை தனது X தளப் பக்கத்தில் அவசர வெள்ள அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அல்லது போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் அது போன்ற பகுதிகளையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சாலைப் பிரிவுகள் பின்வருமாறு: 👉மவுண்ட்பேட்டன் சாலையிலிருந்து தாஞ்சோங்கா தென்கிழக்கு சாலை வரையிலான பக்கசாலை 👉 ஜாலான் சிவியூ அருகே மவுண்ட்பேட்டன் சாலையில் உள்ள சிறிய சாலை 👉 புக்கிட் திமா சாலை அருகே மெக்கன்சி சாலை 👉 கெய்லாங் சாலை மற்றும் கெய்லாங் லோரோங் 1 சந்திப்பு 👉லிமிடெட் பூ சாலை அருகே அப்பர் பாயா லெபார் சாலையில் உள்ள சிறிய சாலை