ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கோல் ரயில் நிலையத்தில் சம்பவமானது நடந்தது.
ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது பயணியின் தலை, கழுத்து ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது.
ரயிலிலிருந்து வெளியேறும் போது தவறி விழுந்ததாக இங் லாய் பிங் கூறினார்.
மேலும் ரயிலின் விளக்குகள் எரியவில்லை எனவும் ரயிலின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறித்து எந்த அறிவிப்புகளும் செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து SBS Transit கூறியதாவது: திருவாட்டி இங்கின் கவனக்குறைவு சம்பவத்திற்கு காரணம் என்று வாதாடியது.
நீதிபதி கூறிய தீர்ப்பு:
பயணிகளை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையை நிறுவனம் காப்பாற்ற தவறியது.
இழப்பீடு உள்ளிட்ட மற்ற விவரங்கள் குறித்து வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனவும், இது குறித்த தீர்ப்பு பின் ஒரு தேதியில் வழங்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு SBS Transit நிறுவனம் தான் முழு பொறுப்பு என்று நீதிபதி கூறினார்
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
