பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்..!!! உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர்..!!

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்..!!! உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர்..!!

சிங்கப்பூர்: பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக நிதி திரட்டும் முயற்சியில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆதரிக்க சிங்கப்பூர் அரசு S$67,800 நிதியை ஒதுக்கியுள்ளது.

இது பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான விதைப் பணமாக செயல்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் இறுதியிலிருந்து நீடித்த பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 4,000 கிராமங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இதனால் 4.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 2.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan