ராணுவப் பயிற்சி வசதி குறித்து சிங்கப்பூர் - இந்தோனேசியா கலந்துரையாடல்!!!
ராணுவப் பயிற்சி வசதி குறித்து சிங்கப்பூர் – இந்தோனேசியா கலந்துரையாடல்!!!
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) பேஸ்புக்கில் பதிவிட்டது: “இரு நாடுகளும் கூடிய விரைவில் கூட்டு போர் விமானச் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடும்”.
இந்தத் தகவலை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ஜாஃப்ரி சம்சுதீன் உடனான சந்திப்புக்குப் பிறகு திரு சான் சிங் வெளியிட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் மேற்குக் கலிமந்தான், பத்துராஜா, சியாபு விமானப் படை ஆயுதங்கள் முகாம் ஆகியவற்றில் ராணுவப் பயிற்சி வசதிகளை ஒன்றிணைத்து உருவாக்குவது குறித்து சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் கலந்துரையடியதைப் பற்றி தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
தென்சுமத்ராவில் உள்ள பத்துராஜாவில் ராணுவப் பயிற்சி வசதியும் ரியாவ்வில் உள்ள பெக்கான்பாருவில் விமானப் படை பயிற்சி வசதியும் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் இருநாடுகளின் ராணுவங்களும் ஒன்று மற்றொன்றிடமிருந்து கற்றுக்கொள்ள கூடுதல் வாய்ப்புகளும் கிடைக்கும் எனவும் அமைச்சர் சான் சிங் தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூரின் சிறப்புப் படைகள் மேற்குக் கலிமந்தானில் முதன்முறையாகப் பயிற்சி மேற்கொள்ளும் என புதன்கிழமை(ஆகஸ்ட் 6) அமைச்சர் சான் தெரிவித்தார்.
இதன்மூலம் சிங்கப்பூர் – இந்தோனேசியா இடையிலான நீண்டகால, வலுவான இருதரப்பு தற்காப்பு உறவை மேலும் உறுதி செய்தனர்.
திரு சான், இந்தோனேசியாவுக்கு இரண்டு நாள் அறிமுகப் பயணம் மேற்கொண்டிருந்தார்.அப்பயணம் நேற்று (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) நிறைவடைந்தது.