சிங்கப்பூரில் உஷாரா வேலை செய்யாட்டி இதுதான் நிலைமையா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தை மீறியதற்காக, பணியிடத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு இயந்திர ஆபரேட்டர்கள் முறையே ஆறு மற்றும் ஐந்து மாத சிறைதண்டனை அடைந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், டி.எம்.சி கான்கிரீட் பம்பிங் சர்வீசஸில் உதவி ஆபரேட்டராக இருந்த பொன்ராமன் ஏழுமலை, கட்டுமான தளத்தில் கான்கிரீட் பம்ப் லாரியின் கால்க் மற்றும் சேசிஸுக்கு இடையில் சிக்கி மரணமடைந்தார்.
விசாரணை அதிகாரிகள், கான்கிரீட் பம்ப் லாரியை இயக்கிய வெள்ளைசாமி சரவண்குமார், ஒரு நேரத்தில் ஒரு அவுட்ரிகரை மட்டுமே இயக்க வேண்டும் என்ற பயிற்சியை பின்பற்றவில்லை. அவுட்ரிகரை இயக்கும்போது ஆபத்து மண்டலத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்.மேலும் அவுட்ரிகரை சுழற்றுவதற்கு முன்பு அந்தப் பகுதி பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்யத் தவறிவிட்டார்.இதற்காக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மேலும், டிசம்பர் 2022 இல், தயாரிப்பு ஆபரேட்டர் சௌ யி லாய், 900 கிலோ எடை கொண்ட கிரிம்பிங் பெட்டியால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார். விசாரணையில், ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர் ஓங் பூட் செங், பெட்டியின் எடை, வடிவம் மற்றும் அளவை சரிபார்க்காமல், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டதாவது, கட்டுமானம், போக்குவரத்து மற்றும் கிடங்கு போன்ற ஆபத்துள்ள தொழில்களில் பணியிட இறப்புகள் அதிகம் நடக்கின்றன. குறிப்பாக போக்குவரத்து துறையில் மட்டும் நான்கு பணியிட இறப்புகள் நிகழ்ந்தன.அதில் இரண்டு வேலை தொடர்பான போக்குவரத்து விபத்துகளால் ஏற்பட்டவை. மேலும், கடுமையான பணியிட காயங்களுக்கு இயந்திர விபத்துகளும் முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவித்தது.