ஜோகூர் மையங்களில் அதிகரிக்கும் சிங்கப்பூர் தாய்மார்கள் வருகை..!! ஏன் தெரியுமா..??
சிங்கப்பூர்:பெரும்பாலான சிங்கப்பூர் தாய்மார்கள் குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த பராமரிப்பு காரணமாக மலேசியாவின் ஜோகூரை தேர்வு செய்கிறார்கள்.
ஜோகூரில் உள்ள சில மையங்களில் சிங்கப்பூரிலிருந்து வரும் தாய்மார்களின் விகிதம் இரட்டிப்பாக அதிகரித்து வந்துள்ளது.COVID-19 தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட இரட்டிப்பாகி வருவதாகவும் தெரிவித்தன.
மலேசியாவில் 28 நாள் பேக்கேஜ்களின் விலை சுமார் S$5,790 – S$12,200 வரை இருந்தாலும், சிங்கப்பூரில் இதே பேக்கேஜுகள் S$15,888 அல்லது அதற்கு மேல் செலவாகும் என்று கூறுகின்றனர்.மேலும், உள்ளூரில் காப்பக பராமரிப்பாளரை வேலைக்கு அமர்த்தினால், மாதத்திற்கு குறைந்தது S$3,000 செலவாகும்.
ஆனால், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள், பிரசவத்திற்குப் பிறகு விரைவில் வெளிநாடு செல்லும் தாய்மார்கள் சில பாதுகாப்பு அபாயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறார். பிரசவத்துக்குப் பிறகு உடனடியாக பயணம் செய்வது தாய் மற்றும் குழந்தையின் பராமரிப்பையும் பாதிக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.