சிங்கப்பூரின் ஜெயின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

சிங்கப்பூரின் ஜெயின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து...!!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பயண நிறுவனமான ஜெயின் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் நேற்று (03.09.25) ரத்து செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது. இனிமேல் அந்த நிறுவனம் எந்தவொரு பயண நிறுவனம் தொடர்பான வணிகத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டது.

சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, ஜெய்ன் டிராவல்ஸ் தனது தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வருடாந்திர வணிக மேலோட்ட அறிக்கைகள் ஆகியவற்றை சமர்ப்பிக்க தவறியுள்ளது. விதிமுறைப்படி, பயண நிறுவனங்கள் தங்கள் நிதியாண்டின் இறுதியில் ஆறு மாதங்களுக்குள் இவ்வாறான ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமம் ரத்து செய்யப்பட்ட பயண முகமைகள், தற்போதுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணம் திருப்பித் தர வேண்டும் அல்லது தங்களின் கடமைகளை சட்டபூர்வ உரிமம் பெற்ற பயண முகமைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

மேலும், சட்டவிரோதமாக செயல்படும் பயண முகமைகளை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்றும், சிங்கப்பூரின் சுற்றுலா துறையின் நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்காது என்றும் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள், தொடர்புடைய விஷயங்களை உறுதிப்படுத்த சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் “TRUST” வலைத்தளம் அல்லது stb_ta@stb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் சமீபத்திய சட்டபூர்வ பயண முகமைகளின் பட்டியலை சரிபார்க்கலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan