AI பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை..!!

AI பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை..!!

GOOGLE மற்றும் அல்பஃபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அவர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) பற்றிய கருத்தை பிபிசி ஊடகத்தின் வழியாக பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.

கூகுளின் தேடல் தளமானது மிகவும் துல்லியமான தகவல்களை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்பட்டுள்ளது என்பதன் காரணத்தினால் பலரும் உபயோகப்படுத்துகின்றனர்.

ஆனால் தற்பொழுது புதிதாக அறிமுகம் கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு தள தேடலில் பிழை இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு(AI) தளங்களில் ஏற்படும் பிழைகள் குறித்து இணையத்தில் இணையவாசிகள் குறை கூறியுள்ளதாக ஏற்கனவே BBC செய்தி தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

 கூகுளின் செயற்கை நுண்ணறிவு(AI) தளங்களின் தரத்தினை உயர்த்த வேண்டும் என நிபுணர்கள் சொல்கின்றனர். ஆனால், சுந்தர் பிச்சை அவர்கள் கூறியதாவது: “பயனீட்டாளர்கள் அவர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்”.

செயற்கை நுண்ணறிவு கருவிகள் சில நேரங்களில் தவறாக தகவலை தரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வேறு வழிகள் மூலமாக தகவல்களை சரி பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK