கிளமெண்டியில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!!

கிளமெண்டியில் ஏற்பட்ட பயங்கர விபத்து..!!

சிங்கப்பூரில் நேற்று நவம்பர் 2ஆம் தேதி கிளமெண்டி MRT அருகில் இரு கார்கள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 46 வயது பெண் ஒருவர் சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் சரியாக 12 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது என்று SCDF தெரிவித்துள்ளது.

காரை ஓட்டி வந்த 46 வயது பெண்ணுக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றொரு காரை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் யார் மீது தவறு உள்ளது என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.