சிங்கப்பூர்: சிங்கப்பூரில் துவாஸ் நோக்கி செல்லும் விரைவு சாலையின் ஒரு சந்திப்பில் பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 வயதுடைய ஒரு ஆண் ஓட்டுனர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர் 32 வயதைச் சேர்ந்தவர். இவர் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்த தகவலானது இன்று (9-ஆம் தேதி) காலை 6:25 மணிக்கு கிடைத்ததாக சிவில் பாதுகாப்பு படையும் காவல்துறையும் தெரிவித்துள்ளன.
சாலை விபத்து குறித்து வீடியோ பதிவானது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் விபத்து நடந்த சாலையில் உடலை மூடுவதற்காக ஒரு நீல நிறக் கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் அந்த கூடாரத்திற்கு அருகிலே மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் ஒன்று சிவப்பு நிறத்தில் இருந்தது.
விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு காவல்துறைக்கு 32 வயதான ஆண் ஓட்டுனர் தகவலை அழைத்து வருகிறார்.
விபத்திற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.