மகளை துன்புறுத்திய கொடூரத் தந்தை..!! தண்டனை என்ன..??

மகளை துன்புறுத்திய கொடூரத் தந்தை..!! தண்டனை என்ன..??

2015 ஆம் ஆண்டிற்கும் 2018 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 6-9 வயதிற்கு இடைப்பட்ட சிறுமியை அவரது தந்தை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

அந்த நேரத்தில், மனைவி, தாயார், மாமியார், மூத்த மகன் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

தந்தையே தனது மகளை பிற்பகல் வேளையில் அவர்கள் அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது தமது படுக்கையறையில் மகளை தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

இதைப் பற்றி அந்தச் சிறுமி தமது பாட்டியிடம் கூறியுள்ளார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மற்றும் ஆலோசகர் இடம் இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஆனது குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த வழக்கானது நீதிமன்ற விசாரிக்க வந்த போது, 57 வயது சேர்ந்த ஆடவர் குற்றத்தை உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, (ஏப்ரல் 20) நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டவர் மீது, பாலியல் வன்கொடுமை முயற்சி, சிறுமியிடம் முறையற்ற பாலியல் செயல்களை செய்யத் தூண்டியது ஆகிய குற்றங்களும் தண்டனை விதிப்பில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK