சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் விமானியாக வேலை செய்வதாக கூறி குடும்பத்தை ஏமாற்றி வந்த நபர்!!கையும் களவுமாக பிடிப்பட்டது எப்படி?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் விமானியாக வேலை செய்வதாக கூறி குடும்பத்தை ஏமாற்றி வந்த நபர்!!கையும் களவுமாக பிடிப்பட்டது எப்படி?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி போல் ஆடையணிந்து விமான நிலையம் அருகே சுற்றி திரிந்த சங்கீத் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு வயது 24 என்பதும் தெரிய வந்தது.

விமானியைப் போல் உடையணிந்து டெல்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானிப் போல் ஆள்மாறாட்டம் செய்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

அவரிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Id கார்டு இருந்ததாக Hindustan Times செய்தி குறிப்பிட்டுள்ளது.

அவரிடம் இருந்த Id கார்டை சோதனைச் செய்ததில் அது போலி என்பது தெரிய வந்துள்ளது.

அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டது.

அவர் போலி Id கார்டை சிங் ஆன்லைனில் மூலம் தயாரித்துள்ளார்.

அதோடு விமானி உடையை பைலட் பயிற்சி மையத்திலிருந்து பெற்றுள்ளார்.

அவரது குடும்பத்தினரிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாக வேலை பார்ப்பதாக ஏமாற்றி வந்துள்ளார். அதனால் தான் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.