ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!!

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!!

கிழக்கு ஆப்ரிக்காவில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

கென்யாவில், இந்த வாரம் 10 பேர் உட்பட மார்ச் முதல் குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நைரோபி மற்றும் பிற முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பலர் தங்கள் வீடுகளையும் இழந்துள்ளனர்.

தான்சானியாவில்இறப்பு எண்ணிக்கை 155 ஐ எட்டியுள்ளது. புருண்டியில் நூறாயிரக்கணக்கானோர் தங்கள் இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகளின் வடிவத்தின் ஒரு பகுதியாக வெள்ளம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ மீட்பு பணிகளுக்காக ராணுவத்தை குவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் அதிக மழை பெய்யக் கூடும் என முன்னறிவிப்பு இருப்பதால் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.