வாடிக்கையாளர்களை கவர வந்தாச்சு…புதிய வகை டேன்ஜரைன்கள்..!!!

வாடிக்கையாளர்களை கவர வந்தாச்சு…புதிய வகை டேன்ஜரைன்கள்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசந்த விழா நெருங்கி வரும் நிலையில், சந்திர புத்தாண்டின் முக்கிய அடையாளமான டேன்ஜரைன் ஆரஞ்சுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.இந்த ஆண்டு வானிலை காரணமாக பெரிய டேன்ஜரைன்களின் உற்பத்தி கடந்த ஆண்டை விட சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதால், சில வகைகளின் விலை சற்றே உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரம்பரிய யோங்சுன் டேன்ஜரைன்களுக்கு மழை பற்றாக்குறை காரணமாக விநியோகம் குறைந்துள்ளதுடன், அதன் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்துள்ளது.அதே நேரத்தில்,பிற டேன்ஜரைன் வகைகள் போதிய அளவில் கிடைப்பதால்,அவற்றின் விலைகள் கடந்த ஆண்டைப் போலவே நிலைத்திருக்கின்றன.

வாடிக்கையாளர்களின் மாறும் ரசனைக்கு ஏற்ப, விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் ‘பாபா’, ‘ஹாங் மெய்ரன்’, ‘கோல்டன் பியூட்டி’, ‘கான்பிங்’ போன்ற புதிய மற்றும் மேம்பட்ட டேன்ஜரைன் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டேன்ஜரைன்கள் இனிப்பு, ஜூசி தன்மை மற்றும் அழகான தோற்றம் காரணமாக பரிசுகளுக்காக அதிகம் விரும்பப்படுகின்றன.
இந்த புதிய வகைகளின் வரவேற்பால், இந்த ஆண்டு டேன்ஜரைன்களுக்கான மொத்த தேவை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர். சப்ளை சீராக இருக்க, விற்பனையாளர்கள் முன்கூட்டியே இறக்குமதியை அதிகரித்துள்ளதுடன், கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் சிறப்பு விற்பனை மற்றும் சலுகைகளையும் தொடங்கியுள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.