வாகனகளை அனுமதி இல்லாமல் ஓட்டினால் சிங்கப்பூரில் இனிமேல் இப்படிதான்..!!

வாகன*களை அனுமதி இல்லாமல் ஓட்டினால் சிங்கப்பூரில் இனிமேல் இப்படி*தான்..!!

சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட திடீர் அமலாக்க நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் விதியை மீறி அனுமதி இல்லாமல் சாலையில் வாகனங்களை ஓட்டிய காரணத்திற்காக அமலாக்க நடவடிக்கைகளை பல்வேறு இடங்களில் சிங்கப்பூர் முழுவதும் நிலப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்த செய்தியானது சமூக வலைதளமான பேஸ்புக்கில் நிலப் போக்குவரத்து ஆணையம் பதிவிட்டு இருக்கிறது.

கனரக வாகனங்களை விதியை மீறி இயக்கியதால் சுமார் 140 ககும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்து ஆணையம் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

இதில் சுமார் 60 வாகனங்கள் அனுமதி இல்லாமல் விரைவுச் சாலையில் இயக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனத்தின் உடைய அளவு மற்றும் எடையை காரணமாக கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் சாலை கட்டமைப்புகளை சேதப்படுத்திய காரணத்திற்காகவும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக LTA தெரியப்படுத்தியுள்ளது.

மேலும் 85 வாகனங்கள் சரக்குகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அளவுக்கு மீறி வாகனங்களில் சரக்குகளை ஏற்றுக்கொண்ட காரணத்தினால் அதை கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்த காரணம்?
அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி செல்லும் பொழுது எடை அதிகரிப்பதன் காரணம் சாலையில் விழுந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதனால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக எல்டிஏ தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையை மீறுபவர்களுக்கு $1,000 அபராதம் மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிலப் போக்குவரத் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி செயல்படுபவருக்கு தண்டனை இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK