இணைய தடங்கல்களை பல கோணத்தில் கண்காணிக்கும் விதமாக டவுன்டிடெக்டர் தளம், ஸ்டார் ஹப், m1 ஆகிய தொலைதொடர்பு சேவைகளுடன் வாட்ஸ்அப், டிஸ்கார்ட் போன்ற குழுவாக உரையாடும் சேவைகளுக்கும் தற்காலிகமாக தடை ஏற்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 3 40 மணிக்கு இந்த தடை குறித்த புகார்கள் வந்ததை அடுத்த 15 நிமிடங்கள் பிறகு இணையதளங்கள் பாதிப்பானது குறைய தொடங்கினர்.
சிங்டெல் குறித்த புகார்களில் பகுதி அளவுக்கு இணையச் சேவை பற்றி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைபேசி இணையத் தொடர்பு குறித்து 29 சதவீதம் புகார்கள் சிங்டெல் நிறுவனத்திற்கு வந்துள்ளன.
கிட்டத்தட்ட நான்கு மணி அளவில் சிங்டெல் புகார்கள் 1700 க்கு குறைய தொடங்கியது.
நேற்று மாலை 5:23 மணி அளவில் அனைத்து உலக தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல் (international traffic optimisation) தொடர்புடைய சிக்கல் ஏற்பட்டுள்ளன.
இந்த பிரச்சனை ஆனது 15 நிமிடத்திற்குள் சரி செய்யப்பட்டது. தங்களது உள்ளூர் கட்டமைப்பு சீராகவும், எதிர்பார்த்தபடி எந்தவித தடையும் இன்றி இயங்கி வருகிறது என்பதையும் சிங்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.