குடிபோதையில் காரை சாலையில் பறக்க விட்ட நபரால் நேர்ந்த விபரீதம்..!!!

குடிபோதையில் காரை சாலையில் பறக்க விட்ட நபரால் நேர்ந்த விபரீதம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பூன் கெங் MRT நிலையத்திற்கு அருகே ஒரு கார் விபத்து ஏற்பட்டது.

நேற்று (03.10.25) இரவு 9:15 மணிக்கு லாவெண்டர் தெரு மற்றும் செராங்கூன் சாலை சந்திப்பில் MRT நிலையத்திற்கு அருகில் உதவி தேவைப்படுவதாக சிவில் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் கார் சாலையோரத்தில் சாய்ந்து, போக்குவரத்து விளக்கை பக்கவாட்டில் மோதியபடி இருந்தது.

இந்த விபத்தில் 70 வயது பாதசாரி டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 37 வயது மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சாலையோர போக்குவரத்து விளக்கில் மோதியதில் கருப்பு நிற மெர்சிடர்ஸ் கார் கடுமையாக சேதமடைந்ததாகவும், சாலையோர பக்கவாட்டு விளக்கு சாய்ந்து கிடப்பதையும் காட்டுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகின்றது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK