சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

சிங்கப்பூரில் பரிதாபம்..!! மீன் பண்ணையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

சிங்கப்பூரில் லிம் சூ காங் அருகே உள்ள மீன் பண்ணையில் வேலை செய்யும் 30 வயது இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மே 5- ஆம் தேதி அன்று பிற்பகல் 4:00 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் லிங் சூ காங் படகு துறையின் முகவரி ஆன 691 லிம் சூ காங் சாலையில் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது. தகவல் கிடைத்து சிங்கப்பூர் காவல்துறையும், சிங்கப்பூர் குடிமைப் தற்காப்புப் படையினரும் (SCPF) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வந்த போது சுயநினைவின்றி அந்த மீன் பிடி தொழிலாளர் இருந்துள்ளார்.

சிகிச்சைக்காக அந்த நபரை SCDF வீரர்கள் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த முதற்கட்ட விசாரணையில் இது கொலை அல்ல என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இந்த வழக்கானது இன்னும் விசாரணையில் உள்ளது என்று காவல்துறையும் மனிதவள அமைச்சகமும் கூறியுள்ளது.

உயிரிழந்த மீன்பிடி தொழிலாளர் F20W நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் MOM கூறியது.

தேசிய சுற்றுசூழல் அமைப்பு மே 5- ஆம் தேதி அன்று மாலை 5:10 மணியளவில் தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை கிடைத்தவுடன் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கடைசி இடி சத்தம் கேட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருந்த பின்னர் வெளிப்புறப் பணிகளை தொடங்குமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மே மாதத்தின் முதல்  பாதையில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 30-ஆம் தேதிஅன்று ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

சிங்கப்பூரில் ஆண்டுக்கு சராசரியாக 176 நாட்கள் மின்னல் ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK