அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!!
மத்திய சீனாவில் அமைந்திருந்த ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளன்று இந்த பரிதாபகரமான விபத்து நிகழ்ந்தது.
சீனாவில் விடுமுறை காலங்களில், குறிப்பாக சீனப் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் அண்மை ஆண்டுகளில், பெய்ஜிங் உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் பட்டாசு வெடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தடைகள் இருந்தபோதிலும், நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பட்டாசு வெடிக்கும் பழக்கம் தொடர்ந்துவருகிறது. இதன் விளைவாக அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.
நேற்று(18.02.26) பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஹுபெய் மாநிலத்தின் ஸெங்ஜி நகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீரென தீப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சீனாவில் இதுபோன்ற தொழிற்துறை விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும், பாதுகாப்புத் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படாததே அதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.