சிங்கப்பூரில் இருவர் உயிரிழப்பு..!!காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இருவர் உயிரிழப்பு..!!காரணம் என்ன..??

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட “மேண்டி” எனும் கப்பலில் திடீரென தீ பற்றியது. சீனாவிற்கு தொலைவில் உள்ள கடற் பகுதியில் நேற்று(பிப்ரவரி 17) இந்த தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதில் கப்பலில் இருந்த மூன்று சிப்பந்திகளில் இருவர் உயிரிழந்து விட்டனர். மூன்றாவதாக இருந்தால் சிப்பந்தி உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் கடல் துறை துறைமுக ஆணையம் இந்த தகவலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

கப்பலில் சுமார் 25 சிற்பந்திகள் இருந்துள்ளனர் எனவும் இவர்கள் மியான் வரை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதில் சிங்கப்பூரர் எவரும் இல்லை எனவும் ஆணையும் தெரிவித்திருக்கிறது.

சிங்கப்பூர் நேரப்படி இரவு சரியாக 7:30 மணி அளவில் கப்பலை இயந்திரம் இருந்த அறையில் கப்பலில் தீ பற்றியதாக கூறப்பட்டுள்ளது இதில் இருந்த சிற்பந்திகள் தீயை அணைத்துள்ளனர்.

தீ பற்றிய கப்பலை சீனாவின் யான் தாய் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டு இருக்கிறது. இதன் மூலம் காற்றின் தூய்மைக்க எந்த ஒரு கேடும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்திருக்கிறது.

இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனும் சீன அதிகாரிகளுடனும் தற்போது தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK