சிங்கப்பூர் இளைஞர்கள் முதலீட்டில் எதை நம்புகிறார்கள்…???

சிங்கப்பூர் இளைஞர்கள் முதலீட்டில் எதை நம்புகிறார்கள்...???

சிங்கப்பூர்: இன்றைய இளைஞர்கள் அதிக வட்டி வங்கிக் கணக்குகளை (High-interest savings account) தான் முக்கிய முதலீட்டு வாய்ப்பாகக் கருதி வருகிறார்கள்.

முதலீட்டு தேர்வாக பங்கு, யூனிட் டிரஸ்ட், காப்பீடு போன்ற பல்வேறு வழிகள் இருந்தாலும், எளிதில் அணுகக்கூடியதும், பாதுகாப்பானதும் என்பதற்காகவே இளைஞர்கள் வங்கி சேமிப்பு கணக்குகளையே அதிகமாகத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள்.

அதிக வட்டி விகிதம் வழங்கும் சேமிப்பு கணக்குகள், குறைந்த ஆபத்து கொண்ட முதலீடாக கருதப்படுகின்றன. அதேசமயம், டிஜிட்டல் வாலெட், ஆன்லைன் வங்கி வசதிகள் மூலம் சேமிப்பை எளிதாகக் கட்டுப்படுத்தும் சாத்தியம் கூடுதலாக இருப்பது போன்ற காரணங்களால் இளைஞர்கள் அதை தேர்வு செய்கிறார்கள்.

நிபுணர்கள் கூறுகையில், நீண்ட கால முதலீட்டுக்கு பங்குச் சந்தை மற்றும் பிற நிதி கருவிகள் பயனுள்ளதாக இருந்தாலும், குறுகிய காலத்தில் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அதிக வட்டி வங்கிக் கணக்குகளையே சிறந்த தேர்வாகக் கருதுவதாக கூறியுள்ளனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan