கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.??

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்றிரவு(16.01.26) கேலாங்கிலிருந்து மரைன் பரேட் வரை பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் ஒரு காரைப் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவு 10 மணியளவில் சாம்பல் நிற செடான் கார் ஒன்று அதிவேகமாகச் சென்றதை தொடர்ந்து,பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் சைரன் ஒலியுடன் அந்த காரைப் பின்தொடர்ந்தன.

மரைன் பரேட் சாலையில் விபத்தில் சிக்கிய பின்னரே அந்த கார் நின்றதாக இணையத்தில் பகிரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.

மரைன் பரேட் MRT நிலையம் அருகே இரண்டு கார்கள் சேதமடைந்த நிலையில் நின்றிருந்ததையும், முன்புற காரின் பின்பகுதி சேதமடைந்திருந்ததையும் காண முடிந்தது.

சம்பவ இடத்தில் போலீசாரால் சூழப்பட்ட ஒருவரை கைது செய்ததாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.