கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமை அன்று சாங்கி விமான நிலையம் கிட்டத்தட்ட 2,23,000 பயணிகளுக்கு சேவை அளித்து வந்துள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் அதிக பயணிகள் எந்த நாட்டில் இருந்து வந்துள்ளனர்? முதல் இடத்தில் சீனா, அடுத்த இடத்தில் இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு சாங்கி விமான நிலையத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 70 மில்லியன் பயணிகள் வருகை அளித்திருப்பது பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய ஆண்டை (2024) ஒப்பிடும்போது கடந்த ஆண்டு (2025) 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக கடந்த ஆண்டு சாயங்கிய விமான நிலையத்தில் மிகவும் பரபரப்பான நாளாக டிசம்பர் 20, 2025 தெரிவிக்கப்பட்டுள்ளது