இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!!

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!!

ஜப்பான் தலைநகரமான தோக்கியோவில் விமான பயணி ஒருவர் விமான பணி பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது நேற்று முன்தினம் (டிசம்பர் 1) நடந்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது காதலி பக்கத்தில் அமர விரும்புவதாக விமான பணி பெண்ணிடம் கூறியுள்ளார்.

ஆனால் பணிப்பெண் அதற்கு சம்மதிக்காத காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

இதனை அடுத்து விமான பணிப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

பணிப்பெண் புகார் அளித்ததால் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது மேலும் அந்த பயணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 7:45 மணி அளவில் விமானம் புறப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே விமான நிறுவனமானது பாதிக்கப்பட்ட பயணிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் 85 வெள்ளி (10,000 யென்) இழப்பீடு வழங்கியுள்ளது.

ஆனால் பயணிகளுக்கு தங்கம் வசதி எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே விமான நிலையத்தில் இருந்த இருக்கைகளில் பயணிகள் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

விமானம் ஆனது டிசம்பர் 2 ஆம் தேதி காலை மீண்டும் புறப்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK