சிங்கப்பூரில் உட்லேண்ட் நிறுவனம் புதிய மையம் திறப்பு..!!!

சிங்கப்பூரில் உட்லேண்ட் நிறுவனம் புதிய மையம் திறப்பு..!!!

உட்லேண்ட்ஸ் மருத்துவ மையம் தொடங்கி நேற்று (02/08/2025) ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிறைவு விழாவைக் கொண்டாடியதுடன் ஒரு புதிய மையம் நிறுவ இருப்பதாகக் அறிவித்தது.

இந்த தொடக்க விழாவிற்குத் தலைமை தாங்க சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் மற்றும் சமூகக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் உட்லேண்ட்ஸ் மருத்துவ மையம் அழைத்தது.

அம்மையத்தின் பெயர் – காயம் மற்றும் வாஸ்குலார் மையம் ஆகும். மேலும், இந்த மையம் நிறுவப்பட்டவுடன் நீரிழிவு மற்றும் வாஸ்குலார் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கால் மற்றும் கால் புண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த மருத்துவ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிய மையத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு பராமரிப்பு மூலம் கால் புண்களை முன்கூட்டியே கண்டறிவதுடன் மேலும், பல்துறை ஒத்துழைப்பும் கொடுத்து சிகிச்சையளிக்க உதவுகிறது.

கடந்த ஆண்டில்(2024), உட்லேண்ட்ஸ் மருத்துவ மையம் நீரிழிவு மூலம் ஏற்பட்ட கால் புண்களுக்கு சிகிச்சையளித்து 400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது. அவர்களில் சுமார் 30% பேர் ஒரு வருடத்திற்குள் உறுப்பு துண்டிக்கப்படும் அபாயத்தில் இருந்தனர். தற்போது, 3% க்கும் குறைவாகவே உள்ளனர்.

நீரிழிவு மேலாண்மைக்காக பல்துறைக் குழுவில் காயம் பராமரிப்புக்கு பாத மருத்துவர்கள், செவிலியர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் உட்சுரப்பியல் நிபுணர்கள் உள்ளனர்.

கூடுதல் தகவலாக, உட்லேண்ட்ஸ் மருத்துவ மையம் இந்த ஆண்டு (2025) இறுதியில் வடக்குப் பகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட பெருங்குடல் மதிப்பீட்டு மையமாக அதிகாரப்பூர்வமாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ மையம் இதன் முதல் வருட செயல்பாட்டில், 79 பெருங்குடல் புற்றுநோய் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, அவற்றில் 66% க்கும் அதிகமானவை புற்றுநோயின் 3 அல்லது 4 ஆம் கட்டத்தில் கண்டறியப்பட்டன.

புதிய மையத்தை நிறுவுவதன் மூலம் மலக்குடல் புற்றுநோய் பரிசோதனைக்கான அணுகலை விரிவாக்கி மேலும், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையை மேம்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan