மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!!

மண்டல அளவிலான செஸ் போட்டி....செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!!

திருமயம் ஜன.19___
திருமயம் அருகே லெணாவிலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியின் சதுரங்க அணி தஞ்சை மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றது. இதையடுத்து கல்லூரியில் பாராட்டு விழா நடைப்பெற்றதுமுதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

கல்லூரி தலைவர் செல்வராஜ் , நிர்வாக இயக்குநர் வயிரவன் ,செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. அதில் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டு இறுதி போட்டியில் கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியை வென்று மண்டல அளவில் முதலிடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முதன்மை செயல் அலுவலர் . கார்த்திக் மாணவர்களைப் பாராட்டிப் பேசினார்.இதில் உப தலைவர் நடராஜன் , தாளாளர் ராமையா , முதன்மை செயல் இயக்குனர் பாண்டிகிருஷ்ணன் மனிதவள இயக்குனர் . மீனா வயிரவன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.