சிங்கப்பூரில் ஒருவருக்கு 15 மாத சிறை தண்டனை..!! பன்றி இறைச்சியை மசூதிகளுக்கு அனுப்பியதுதான் காரணமா..??
சிங்கப்பூரைச் சேர்ந்த 62 வயதான பில் டான் கெங் ஹ்வீ, என்பவர் டிசம்பர் 2024 முதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினில் செயல்பாட்டு ஆதரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார் செப்டம்பர் 11, 2025 அன்று அவரது வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்று அறிந்த அவர் பெரும் அதிருப்திக்கு ஆளானார்.
இதற்கு காரணம் அவருடன் வேலை பார்த்த சக ஊழியரே என்று அவர் நம்பினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பல மசூதிகளுக்கு பன்றி இறைச்சி துண்டுகள், அவதூறான வார்த்தைகள் மற்றும் பெண் சக ஊழியருடைய தொலைபேசி எண் அடங்கிய கடிதங்களை அனுப்புவதற்கு திட்டமிட்டு இருந்தார். இதன் மூலமாக கடிதத்தை பெறுபவர்கள் அவரை தொடர்பு கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்குவர் என நினைத்துள்ளார்.
அதன் பிறகு அந்த நபர் பன்றி இறைச்சி உரைகள் மற்றும் காகிதத்தை வாங்கி அந்த பன்றி இறைச்சி துண்டுகளையும் கடிதங்களையும் ஒரு பொட்டலங்களாக கட்டி 2025 செப்டம்பர் 15ஆம் தேதி அவற்றை ஏழு மசூதிகளுக்கு அஞ்சலில் அனுப்பியுள்ளார்.
நான்கு நாட்கள் கழித்து பல மசூதிகளுக்கு அந்த பொட்டலமானது வந்து சேர்ந்தது. அதில் பன்றி இறைச்சி இருப்பதை அறிந்ததும் மசூதி ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
பணிபுரியும் சக ஊழியர்களின் ஒருவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
உடனேயே காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மதம் சார்ந்த குற்றங்கள் சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்குவது அவசியமான ஒன்று என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதற்காக மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார் என கூறினர்.
ஆனால் பிரதிவாதியின் நோக்கம் முஸ்லிம் சமூகத்தை தாக்குவது அல்ல அதற்கு மாறாக பாதிக்கப்பட்டவரை பழிவாங்குவதே அவரை நோக்கமாக இருந்தது என்று பாதுகாப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆயினும் தமது சமூகம் வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையேயான அமைதியான சக வாழ்வின் அடித்தளத்தில் காட்டப்பட்டுள்ளது எனவும் மத மற்றும் இன நல்லிணக்கம் என்பது ஒரு லட்சிய மட்டும் அல்ல அது பொது ஒழுங்கு மற்றும் தேசிய ஒற்றுமையின் ஒரு அடித்தளமாக இருக்கிறது என்றும் நீதிபதிஷர்மிளா ஶ்ரீபதி ஷானாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த நல்லிணக்கம் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பன்றி இறைச்சி மற்றும் அவமதிக்கும் உள்ளடக்கம் அடங்கிய கடிதங்களை பிரதிவாதி பல மசூதிகளுக்கு வேண்டுமென்றே அனுப்பியது ஒரு திட்டவட்டமாகவும் மிகவும் புண்படுத்தும் மற்றும் கோபமூட்டம் செயலாகும் என்றும் கூறியுள்ளார்.
மத மோதல்களை தீவிர படுத்தக்கூடிய சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க கூடிய அல்லது பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ளும் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக இது போன்ற செயல்களுக்கு நீதிமன்றங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதிவாதியான பில் டான் மற்றொருவரின் மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்திய மூன்று குற்றச்சாட்டுகளையும், துன்புறுத்தால் தொடர்புடைய ஒரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். மேலும் மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகளை தண்டனை வழங்கும்போது நீதிபதி பதில் அளிப்பார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த குற்றத்திற்காக நேற்று (மே 11) குற்றம் சாட்டப்பட்டவருக்கு 15 மாத சிறை தண்டனை விதித்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்துகின்ற குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படலாம். ஒருவரை அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி துன்புறுத்தினால் அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.