34 வயது சீனப் பெண்ணிற்கு 7 மாத சிறை தண்டனை..!! ஏன்..??எதற்கு..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 34 வயதான சீனப் பெண் ஒருவர் இந்தோனேசியாவின் யோகியாகர்த்தா விமான நிலையத்திலிருந்து சீனாவிற்கு திரும்பும் வழியில் சிங்கப்பூர் வழியாக பயணம் செய்தபோது பல்வேறு விதமான சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
சீன பெண் முதலில் இந்தோனேசியா விமான நிலையத்தில் ஆபாசமாகப் பேசியதற்காக உள்ளூரில் கைது செய்யப்பட்டார். பின்னர், சிங்கப்பூரில் ஜாமீனில் வெளியே வந்தபோது, மீண்டும் பிரச்சனைகளை ஏற்படுத்தினார். இதனால் அவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 8 மணியளவில், எந்த காரணமும் இல்லாமல் மத்திய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பல்வேறு விதிகளை மீறியதால் மீண்டும் கைது செய்யப்பட்டார். மறுநாள் இரவு, மத்திய காவல் நிலையத்தின் தடுப்பு அறையில் ஒரு பெண் துணை காவல் அதிகாரியின் ஆள்காட்டி விரலைக் கடித்தார். இதனால் அதிகாரியின் விரலில் இரத்தம் கசிந்து, வெளிப்படையான காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டன.
மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் 24 அன்று, ஜாமீனில் இருந்தபோது, ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு ஹாட் பாட் உணவகத்திற்கு இரவு உணவு சாப்பிடச் சென்ற அவர் மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிண்ணங்கள் மற்றும் கரண்டிகளை உடைத்து உணவகத்திற்கு இழப்பு ஏற்படும் வண்ணம் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்தபோது,பணியில் இருந்த துணை காவல் அதிகாரியிடம் வன்முறையில் ஈடுபட்டார்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, நீதிமன்றம் பிரதிவாதியை ஏழு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபித்தது. குற்றச்சாட்டுகளில் விமானச் சட்டங்களை மீறுதல், பொது சேவையைத் தடுக்க துணை போலீஸ் அதிகாரிகளை கடித்தல், துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தை மீறுதல் உள்ளிட்டவை அடங்கும்.
நீதிபதி இறுதியில் அவருக்கு ஏழு மாத சிறைத் தண்டனை விதித்தார். சிறைத் தண்டனையானது அவர் சிறையில் வைக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கிடப்படும்.இதன்படி விடுவிக்கப்படக்கூடிய தேதி நவம்பர் 2 ஆகும்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், குற்றவாளிகள் அதிகாரத்தையும் வன்முறையையும் பொதுமக்களை அச்சுறுத்த பயன்படுத்தக்கூடாது.பொதுமக்களுக்கு தங்கள் செயல்களை தெளிவாக விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.