சோதனை நடத்தப்பட்ட இடங்கள்: பூன் லே, கேலாங், ஆர்ச்சர்ட், சிராங்கூன், தெலுக் பிளாங்கா, உட்லண்ட்ஸ், சாய் சீ மற்றும் பிராஸ் பாசா
S$7,000 க்கும் அதிக மதிப்படைய 97 கிராம் கஞ்சா, 49 கிராம் ஐஸ், 7 கிராம் ஹெராயின் மற்றும் சிறிய அளவிலான எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெடோக் நார்த் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 57 வயது நபரும், அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 36 வயது நபரும், போதைப் பொருள் பயன்படுத்தியதாக 70 வயது முதியவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் காவல்துறை மற்றும் சுகாதார அறிவியல் ஆணையத்துடன் (HSA) இணைந்து 5 இரவு விடுதிகளில் சோதனை நடத்தியது. அதில் 130 பேரிடம் உமிழ்நீர் பரிசோதனை மேற்கொண்டதில் போதைப்பொருள் உட்கொண்டதாக 26 வயது வெளிநாட்டு பெண் ஒருவரையும் CNB கைது செய்துள்ளது.
சிங்கப்பூர் போதைப் பொருள் ஒழிப்பு சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்துவது, விநியோகிப்பது அல்லது அதற்கு துணை போவது போன்றவை கடுமையானத் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த சோதனையில் சிக்கிய 76 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக CNB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.