பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் விபத்து..!! காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதிய டாக்சி..!!

பான் ஐலண்ட் விரைவுச் சாலையில் விபத்து..!! காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதிய டாக்சி..!!

சிங்கப்பூர்: பான் ஐலண்ட் விரைவுச் சாலையில்(PIE) நடந்த இந்த விபத்தில், கம்ஃபர்ட் டெல்டா டாக்சி காவல் வாகனத்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மாலை 5:40 மணியளவில், துவாஸ் நோக்கிச் செல்லும் PIE விரைவுச் சாலையில் நிகழ்ந்துள்ளது.

கம்ஃபர்ட் டெல்டா நிறுவனத்தின் டொயோட்டா நோவா ஹைப்ரிட் (Toyota Noah Hybrid) ரக டாக்சி, போக்குவரத்து காவல்துறையின் எக்ஸ்பிரஸ்வே ரோந்து வாகனத்தின் பின்புறத்தில் பலமாக மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் டாக்சியின் முன்பகுதி மற்றும் பம்பர் கடுமையாகச் சிதைந்து காவல் வாகனத்தின் பின்புறத்தில் சிக்கிக் கொண்டது.

டாக்சியின் ஏர்பேக்குகளும் (Airbags) இயங்கின. இந்த விபத்தில் காவல்துறையின் மின்சார ரோந்து வாகனம் பெரிய அளவிலான பாதிப்பின்றி காணப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 40 வயதுடைய டாக்சி ஓட்டுநரும், டாக்ஸியில் பயணம் செய்த. பயணம் 37 வயதுடைய பயணியும் சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் ஆனது இணையத்தில் பரவி வருகிறது. அதில் டாக்சியின் முன்பகுதி கடுமையாகச் சிதைந்திருந்ததுடன், அதன் முகப்பு விளக்கு மற்றும் பம்பரின் சில பகுதிகள் கழன்று விழுந்திருப்பது தெரிகிறது.


இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் பயணிக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக கம்ஃபர்ட் டெல்டா (ComfortDelGro) நிறுவனம் தெரிவித்துள்ளது.