பாலியல் வன்கொடுமையை மறைத்த வழக்கில் வெளியான தீர்ப்பு..!!

பாலியல் வன்கொடுமையை மறைத்த வழக்கில் வெளியான தீர்ப்பு..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மழலையர் பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று(19.01.26) தீர்ப்பு வெளியானது.கடந்த ஆண்டு மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் சமையல்காரரின் வழக்கை மறைத்ததாக, பள்ளியின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்றம் தெரிவித்ததின் படி, 59 வயது முன்னாள் நிர்வாக இயக்குநருக்கு நான்கு மாதம், 49 வயது முன்னாள் துணை முதல்வருக்கு மூன்று மாதம் இரண்டு வார சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சம்பந்தப்பட்ட சமையல்காரரின் குற்றங்களை புகார் அளிக்க தவறியதோடு, சிசிடிவி கேமராக்களில் உள்ள ஆதாரங்களை மீட்டமைத்து, வீடியோ பதிவுகளை அழித்ததாகச் சாட்சி வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி கூறியதாவது, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கல்வியாளர்களுக்கு முதன்மை பொறுப்பு உண்டு என்றும், குற்றத்தை மறைத்து சமூகத்தின் நம்பிக்கையை கடுமையாகத் துரோகம் செய்ததாக நீதிபதி கூறினார். மேலும் இது சுயநலத் தூண்டுதலால் நடந்த நிகழ்வாகும் என்றும், ஆதாரங்களை அழித்தது காவல்துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது என்றும் கூறினார்.

முழுமையான சம்பவத்தில் மூன்றாவது முன்னாள் பள்ளி முதல்வர் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், தண்டனை அறிவிக்க சில கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு S$26,200 அபராதம் விதிக்கப்பட்டது. ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு நிறுவனமும் மழலையர் பள்ளியின் வணிக உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை 36 மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK