ஆள்மாறாட்ட மோசடி: சிக்கிய நான்கு மலேசியர்கள்..!!

ஆள்மாறாட்ட மோசடி: சிக்கிய நான்கு மலேசியர்கள்..!!

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்த 4 மலேசியர்கள் சிக்கினர்.

பொதுமக்களிடம் பெருந்தொகைகளை மாற்றுவோர் போல குறி வைக்கப்பட்டு அரசாங்க அதிகாரிகள் போல ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் $1.1 மில்லியனுக்கும் அதிகமாக பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் மூலமாக வந்த செய்தியின் படி ஜனவரி 20ஆம் தேதி காவல்துறை இந்த தகவலை தெரிவித்தது.

இதன்படி ஏமாற்றப்பட்டது குறித்து அந்த நபர் கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி காவல்துறையிடம் புகார் செய்திருக்கிறார்.

பண மோசடியில் பறிக்கப்பட்ட பணத்தை அடுத்த சில மணி நேரங்களில் மலேசியாவில் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு பணமாற்ற தளங்களின் மூலமாக மோசடிக்காரர்களின் கைகளுக்கு சேர்ந்ததாக விசாரணை மூலம் தெரிய வந்தது.

மேலும் சிங்கப்பூரின் மோசடிக்கு எதிரான அலுவலகத்தின் அதிகாரிகள் மலேசிய காவல்துறையின் வர்த்தக குற்ற விசாரணை பிரிவு துறையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் வேட்டையில் 24 வயது மற்றும் 30 வயதை சேர்ந்த இரண்டு ஆடவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை ஜனவரி 20ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று மற்றொரு மோசடி சம்பவம் தொடர்பாக ஜனவரி 19ஆம் தேதி காவல்துறைக்கு புகார் வந்தது.

HSBC வங்கியின் அதிகாரி என ஆள் மாறாட்டம் செய்து ஒருவரிடம் $50,000 பணத்தை ஏமாற்றியதன் பேரில் ஏமாறிய நபர் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சிக்கிய 28 வயது ஆடவர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு தப்பிச்செல்ல முயற்சித்த போது கைதானார்.

அடுத்ததாக நடந்த மோசடி வழக்கில், முதியவரிடம் $15,000 பண மோசடி செய்த 26 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK