பத்துமலை கோவில் நியூ அப்டேட்..!!

பத்துமலை கோவில் நியூ அப்டேட்..!!

பத்துமலையில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் நடந்து வருவதை மேற்பார்வையிட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் ஆர் நடராஜா வருகை புரிந்தார்.

அப்போது மின் படிக்கட்டுகளை 10 மலைக் கோவிலில் அமைப்பதற்கு தொழில்நுட்ப இடையூறுகள் இருப்பதை சிலாங்கூர் முதல்வர் அமிரூதின் ஷாரி கூறியிருந்ததை அடுத்து அவற்றை விரைவில் தீர்வு காண்பதற்கு திரு நடராஜா அவர்கள் உறுதியளித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பத்துமலைக்கு பிரதமர் அன்வர் வருகை தந்த போது இந்த விவகாரம் குறித்த விவாதம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கென சிலாங்கூர் முதல்வருக்கும் நடராஜாவுக்கும் இடையே தனிப்பட்ட சந்திப்பும் பிரதமர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததை எடுத்துரைத்தார்.

“என்னையும் முதலமைச்சரையும் அழைத்து பேசிய பிரதமர் மின் படிக்கட்டு விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இது ஒரு சமூக விவகாரம் மற்றும் நீண்ட காலம் நீடிக்க கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக நடராஜா கூறியுள்ளார்”.

மின் படிக்கட்டுகள் உட்பட வணிக வளாகத்திற்கு தற்காலிகமான இடத்தை பெறும் உரிமைத்தையும் சிலாங்கூர் அரசாங்கம் நிராகரித்து விட்டதன் காரணமாக மின்படி கட்டு திட்டம் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முடிவினால் பலவகை திட்டம் தாமதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சனை தீர்வு காணப்பட்டதால் பொதுமக்கள் தவறாக நினைப்பதை தவிர்க்கும்படியும் மேலும் நீதிமன்ற உத்தரவின் கீழ் ஆலயம் இயங்குவதையும் அவர் நினைவு படுத்தியுள்ளார்.

பத்துமலையில் மின் படிக்கட்டுகள் அமைப்பதற்கு வரும் ஜூலையில் அதற்கான தீர்வு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK