சிங்கப்பூர்:சிங்கப்பூர் சீன சமூக சுய உதவி கவுன்சில் (SCHC) மற்றும் சீன குல சங்கங்களின் கூட்டமைப்பு (SCCA) இணைந்து வழங்கும் 2026 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் ஏப்ரல் 23 அன்று தொடங்கப்படுகின்றன.
கல்விச்செலவுகளை சமாளிக்க உதவியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து S$37 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.100,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது பெரிய ஆதரவாக உள்ளது.
தகுதி விதிமுறைகளின் படி, விண்ணப்பதாரர் அல்லது அவர்களின் பெற்றோரில் ஒருவர் சீன வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமகன் அல்லது நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும். குடும்பத்தின் மொத்த மாத வருமானம் S$4,800 க்கு மிகாமல் இருக்க வேண்டும் அல்லது தனிநபர் மாத வருமானம் S$1,400 விட அதிகமாக இருக்கக்கூடாது.
இந்த உதவித்தொகை தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறப்பு கல்வி மாணவர்களின் கல்விச்செலவுகளை ஈடுகட்ட உதவும். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு S$300 தொகையும் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த திட்ட மாணவர்களுக்கு S$480 தொகையும் வழங்கப்படும்.