சிங்கப்பூர் சோதனை சாவடியில் சிக்கிய மலேசிய கார்..!!
சிங்கப்பூர் துவாஸ் சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட போது மலேசிய கார் ஒன்று கடைசியில் குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணை அதிகாரிகளிடம் சிக்கியது.
இந்த நிகழ்வானது பிப்ரவரி 22ஆம் தேதி பிற்பகல் 2:44 மணிக்கு நடந்துள்ளது. துவாஸ் சோதனை சாவடியில் சிங்கப்பூருக்குள் நுழையும் பாதையில் இந்த மலேசிய காரானது பிடிபட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் நுழையும் பாதையை நோக்கி வந்த இந்த கார் பின்னர் வளைந்து தப்ப முயன்ற போது அதிகாரிகள் அதை கண்டறிந்து பிடித்துள்ளனர்.
இந்த கார் மற்ற வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வேகத்தில் எதிர்திசையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாரிகளிடம் வசமாக சிக்கியது. ஜொகூரின் சுல்தான் அபு பாக்கர் சோதனைச் சாவடி அதிகாரிகளுக்கு தகவல் தந்ததை அடுத்து பிற்பகல் 3 மணிக்கு அதே கார் மீண்டும் துவாஸ் சோதனை சாவடிக்குள் நுழைந்ததை அதிகாரி ஒருவர் பார்த்து அந்தக் காரை சுற்றி வளைத்தனர்.
மிக வேகமாக சென்ற அந்த கார் தடுப்பு கம்பி ஒன்றின் மீது மோதி நின்றது. அப்போது யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
காரைப் பிடித்து அதிகாரிகள் அதிலிருந்து 40 வயது மலேசிய ஓட்டுனரையும் 53 வயது மலேசிய பயணியையும் கைது செய்தனர்.
காரை சோதனை செய்தபோது 97 கிராம் போதை மிகுந்த அபின், 69 கிராம் ice, 3 Erimin-5 மாத்திரைகள், கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருள் அடங்கிய 27 மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்தனர்.
இவை அனைத்தும் ஓட்டுனரிடமும் பயணி அமர்ந்திருந்த இருக்கையில் அடியிலும் இருந்தது தெரியவந்தது. ஓட்டுநர் உரிய பயண ஆவணங்களை வைத்திருக்கவும் இல்லை கைதான இரண்டு ஆடவர்களும் மத்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.