ஒரே நாளில் 20 பேர் ஆஜர் – காரணம் என்ன..?

ஒரே நாளில் 20 பேர் ஆஜர் – காரணம் என்ன..?

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் 21 முதல் 52 வயதுக்குட்பட்ட 20 ஓட்டுநர்கள் இன்று(26.02.26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த மாதம் வரை நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் மூச்சுப் பரிசோதனையில் தோல்வியடைந்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஏழு பேர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், வேக மீறல், பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனம் நிறுத்துதல் மற்றும் மீண்டும் குடிபோதையில் ஓட்டுதல் உள்ளிட்ட கூடுதல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் 52 வயதுடைய நபர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதில் அவர் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டது. அவர் முன்பு 2010ஆம் ஆண்டு இதே குற்றத்திற்காக 12 மாதங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சட்டத்தின் கீழ், முதல் முறையாக குற்றம் புரிபவர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது S$2000 முதல் S$10,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம். மீண்டும் குற்றம் செய்தால் இரண்டு ஆண்டுகள் வரை கட்டாய சிறைத் தண்டனையும் S$5000 முதல் S$20,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படும். கூடுதலாக அவர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படலாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மிக ஆபத்தானதும் பொறுப்பற்ற செயலுமாகும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இதற்கு “சகிப்புத்தன்மையற்ற” அணுகுமுறை தொடரும் என்றும், ஓட்டுநர்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK