கோவான் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கோவான் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று(02.03.36) மதியம் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்புப் படை வீரர்களில் சிலர் லேசான தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.