சிங்கப்பூரில் நீங்கள் செய்யவே கூடாத மூன்று தவறுகள்...!!

புதிதாக சிங்கப்பூர் செல்பவர்கள் குறிப்பாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் செய்யவே கூடாத மூன்று தவறுகள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதில் மூன்றாவது தவறு கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.
நீங்கள் சிங்கப்பூர் செல்லும் பொழுது நாடு விட்டு நாடு செல்கிறீர்கள்,அங்கே உள்ள சட்டதிட்டங்கள் என்ன என்று தெரியாமல் சென்றால் அதன் பின் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
குறிப்பாக சிங்கப்பூர் போன்ற சட்ட திட்டங்களை கடுமையாக கடைப்பிடிக்கும் நாடுகளுக்கு செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.
இந்தப் பதிவில் நீங்கள் சிங்கப்பூர் செல்லும் பொழுது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான மூன்று விதிமுறைகளை பார்க்கலாம். இது சிங்கப்பூரில் மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படும். ஆனால் இந்தியாவில் இது மிகவும் சாதாரணம்.
எனவே நீங்கள் சிங்கப்பூர் செல்லும் பொழுது இந்தியா போல் நினைத்துக் கொண்டு அங்கே இந்த குற்றத்தை செய்தால் சிறை தண்டனை கூட கிடைக்கலாம்.
1.குப்பை போடுதல்!
சிங்கப்பூர் ஒரு தூய்மையான நகரம் என்று அனைவருக்கும் தெரியும்.அதற்கு முக்கியமான காரணம் அங்கு குப்பைகளை கண்ட இடத்தில் போட மாட்டார்கள். அப்படி குப்பை போட்டால் அதற்கு மிகவும் கடுமையான தண்டனை கிடைக்கும். 500 டாலர் முதல் 1000 டாலர் வரை உங்களுக்கு அபராதம் விதிக்கலாம்.இதே குற்றத்தை திரும்பத் திரும்ப செய்யும் பொழுது உங்களுக்கு சிறை தண்டனை கூட கிடைக்கும்.
2. பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிகரெட் பிடித்தல்!
சிங்கப்பூரை பொறுத்தவரை நீங்கள் கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. அதேபோல் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க அனுமதி இல்லாத இடங்களிலும் நீங்கள் சிகரெட் பிடிக்க கூடாது.
அது தனியார் இடமாக இருந்தால் கூட உங்களுக்கு ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த குற்றத்தை திரும்பத் திரும்ப செய்தால் உங்களுக்கு சிறை தண்டனையும் கிடைக்கும்.அது மட்டும் இல்லாமல் உங்களை சிங்கப்பூரில் தடை செய்து, தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார்கள்.
3. மூன்றாவது மிகவும் முக்கியமானது, நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தவறுகளை செய்து விட்டோ அல்லது வேற எந்த தவறுகளை செய்து விட்டோ அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றால் இது மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படும்.
சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்து பலரும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு உள்ளார்கள். நீங்கள் லஞ்சம் கொடுக்க முயன்றால் சிறை தண்டனை மட்டுமல்லாமல் உங்கள் பின்புறத்தில் பிரம்படியும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
நீங்கள் சிங்கப்பூர் செல்லும் பொழுது இது போன்ற இன்னும் பல விதிமுறைகள் உள்ளது. அவை என்னென்ன என்று தெரிந்து கொண்டு சென்றால், நீங்கள் சென்ற காரியத்தை சிறப்பாக செய்துவிட்டு திரும்ப வர முடியும். இல்லையென்றால், நீங்கள் தாய்நாடு திரும்புவது கேள்விக்குறியே!
இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. சிங்கப்பூரின் விதிமுறைகளை சரியாக நீங்கள் பின்பற்றும் பட்சத்தில் சிங்கப்பூர் போல ஒரு பாதுகாப்பான நாடு வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
