விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!!

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!!

மாண்ட்ரியல் /வாஷிங்டன் : விமானங்களில் பயணிகளுக்கு கைப்பேசி மின்தேக்கிகள் (Power Bank) பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய நாட்டு விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஏர் புசான் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, லுஃப்ஸ்தான்சா குழுமம் போன்ற விமான நிறுவனங்கள் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் ஆகியவை விமானங்களில் கைப்பேசி மின்தேக்கிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்துடன் இது குறித்த எந்த கருத்தும் கேட்க முடியவில்லை.

மாண்ட்ரியலைத் தலைமையிடமாகக் கொண்ட அனைத்துலக சிவில் விமான போக்குவரத்து அமைப்பானது (ICAO), விமான போக்குவரத்திற்கான அனைத்து நெறிமுறைகளையும் வரையறை செய்து வருகின்றது. இந்த வரையறைகளானது அதன் 193 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

கைப்பேசி மின்தேக்கிகள் (Power Bank) பயன்பாடு மற்றும் மின்னூட்டம் செய்வதையும் விமான பயணத்தின் போது தடை செய்யப்பட உள்ளதாக ICAO அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமானப் பயணத்தின் போது 1 பயணி, 2க்கும் அதிகமான மின்தேக்கிகளைப் (Power Bank) 
பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

கைப்பேசி மின்தேக்கிகள் (Power Bank) தொடர்பான இந்த புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வர இருக்கின்றன.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK