சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!!

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!!

சிங்கப்பூரில் தானியங்கி ஷட்டில் பேருந்து சேவை (Automated Shuttle Bus Service) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்த தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டம் நடந்துள்ளது.

இன்று (ஏப்ரல் 1) முதல் இந்த புதிய தானியங்கி பேருந்து சேவையானது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

பயண முன்பதிவு நிறுவனமான கிராப் (Grab) மற்றும் சீன தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப நிறுவனமான வீரைடுடன் (WeRide ) இணைந்து இந்த புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்களுக்கான இந்த சோதனை ஓட்ட காலத்தில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான வழித்தடம் மற்றும் புறப்படும் நேரத்தை அவர்களேத் தேர்வு செய்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி ஷட்டில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் 1,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சோதனை ஓட்டங்களில் பங்கேற்று பயணத்தின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கருத்துக்கள் வழங்கியுள்ளனர்.

இந்த ஷட்டில் பேருந்துகள் 30,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தானியங்கி ஓட்டுநர் தூரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து கிராஃப்ட் நிர்வாக இயக்குநர் அலெஜான்ட்ரோ ஒசோரியோ கூறியதாவது:
சிங்கப்பூரின் முதல் குடியிருப்பு தானியங்கி ஷட்டில் பேருந்தைப் பொதுமக்களுக்கு அழிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த தொழில்நுட்பமானது பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

வீரைடு (WeRide) பொது மேலாளர் டாக்டர் கெர்ரி ஸூ இது குறித்து கூறியதாவது:
சிங்கப்பூரின் முதல் தன்னாட்சி போக்குவரத்து சேவையை புங்கோலில் தொடங்குவதில் பெருமிதம் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

பேருந்து பயணம் குறித்த விவரங்கள் :
👉🏻பேருந்தின் இயக்க நேரம் : திங்கள் முதல் வெளி வரை, காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.

👉🏻பேருந்தின் வழித்தடங்கள் : 2 முழுமையான தானியங்கி ஷட்டில் வழித்தடங்கள் மற்றும் 20 நிமிடங்கள் எடுக்கும் ஒரு மினி வழித்தடம் .

👉🏻பேருந்து கட்டணம் : இந்த ஆண்டின் (2026) மத்தியில் வணிகச் சேவை தொடங்கும் வரை பொதுமக்களுக்கு இந்த சேவை இலவசம்.

பொதுமக்கள் இந்த வசதியை “Ai.R “என்ற இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்யலாம்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK